அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளாராக மீண்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்வுக்கு நன்றி தெரிவித்து மேலும் ட்ரம்ப் பேசுகையில், ”அமெரிக்காவில் வெவ்வேறு கட்டங்களில் மூன்று கொரோனா தடுப்பு ஊசிகள் தயாராகி வருகிறது.
நடப்பாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வரும். வைரஸை நசுக்குவோம்.
இந்த தேர்தல்தான் நாட்டிலேயே இதுவரை நடந்த முக்கிய தேர்தலாக இருக்கப் போகிறது. அமெரிக்கர்களின் நலன் காக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.
அனைத்து எதிர்ப்புக்களையும், ஆபத்துக்களையும் கடந்து நாம் மீண்டும் உயரத்தை எட்டுவோம்.
சட்டத்தை மதிக்கும் அமெரிக்கார்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா அல்லது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் நபராக ஜோ பைடன் இருப்பார்.
கடந்த 47 ஆண்டுகளாக ஜோ பைடன் வெள்ளை காலர் சட்டை அணிந்தவர்களிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு அவர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
அவர் 47 ஆண்டுகளில் கறுப்பர் இனத்தவர்களுக்கு செய்ததைவிட நான் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகமாக செய்து இருக்கிறேன்.
ஜோ பைடனின் எண்ணமே கொரோனா வைரஸுக்கு தீர்வு காணுவது என்பது இல்லை. அதற்கு மாறாக சரண் அடைவதுதான் அவரது திட்டமாக இருக்கிறது.
மேட் இன் சைனா என்பதுதான் ஜோ பைடனின் மந்திரமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய திட்டமா அனைத்தும் மேட் இன் அமெரிக்கா. முதலில் அமெரிக்காதான் செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும்” என்றார்.