இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீன அதிபர் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நட்பு ரீதியிலான சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை மாமல்லபுரம் நோக்கி திரும்ப செய்து உள்ளது.
ஆனால் இந்தியாவில் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கும் போது, பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது.
தற்போது மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீன தரப்புதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவுக்கான முன்னாள் தூதரும், தற்போதைய சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்மொழிந்ததாகவும், அதை தற்போதைய தூதர் வழிமொழிந்ததாகவும் தெரிகிறது.
சீன தரப்பு மாமல்லபுரத்தை முன்மொழிந்தவுடன் அதற்கு பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் சீன பேரரசுக்கும் இடையே சிறந்த உறவு இருந்ததை நினைவு கூர்ந்து மாமல்லபுரத்தை தேர்வு செய்ததாக தெரிகிறது.