காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்..!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று மாலை டெல்லிக்கு சென்றார்.

ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று பரவியநிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை காங்கிரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் காங்., மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்தித்து நடிகை குஷ்பு பாஜகாவில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நடிகை குஷ்பூ – காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

புதிய கல்விக்கொள்கை குறித்து பாராட்டு தெரிவித்த குஷ்பூவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி விமர்சித்திருந்தார்.

அத்துடன் அக்கட்சியின் எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

அந்த நிகழ்வில் நடிகை குஷ்பூ-வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இருப்பினும் கடந்த வாரம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்த காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதில் பாஜகவுக்கு எதிராக அவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே