சிறார் ஆபாசப்படம் – பட்டதாரி இளைஞர் கைது

குழந்தைகள் ஆபாச படங்களை தனது போனில் டவுன்லோட் செய்து வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்.24 வயதாகும் இவர் பி.எஸ்சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக போலீசாருக்கு விவரங்கள் கிடைக்கப்பெற்றன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2 வருடமாக குழந்தைகள் ஆபாச படம் பார்த்து வந்ததும், மேலும் விசாரணையில் அவரது செல்போனில் ஆபாசப்படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே