கொல்கத்தாவில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து விராட் கோலி சென்றுள்ளார்.
குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு தனது முகத்தில் ஒட்டியிருந்த தாடியை கோலி அகற்றிய உடன் கோலியை அடையாளம் கண்ட குழந்தைகள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.