பள்ளிக்கு கழுத்தில் தாலியுடன் வந்த மாணவி..!!

மாணவி பள்ளிக்கு தாலியுடன் வந்த நிலையில், இளைஞா் மீது போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவா் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்த தகவலின்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினா்.

இதில் மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றதும் பின்னர் செவ்வாய் கிழமை பள்ளிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்டு அரசுக் காப்பகத்தில் சோத்தனா். மேலும் உரிய வயது வராத நிலையில் திருமணம் நடத்திய மாணவியின் பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞரான அருண்பிரகாஷ், அவரது பெற்றோர் மீதும் போலீசார் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்துவைத்த விவகாரம் அப்பகுதி மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே