நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் முதலமைச்சர் உரையாடல்..!!

சென்னை அடையாறில் உள்ள பிரம்மகான சபாவில் முதல்வர் முக.ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் முதல்வர் கலந்துரையாடினார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு 68 வயது ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து மிதிவண்டி பயிற்சி, நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இந்நிலையில், அடையாறில் உள்ள பிரம்மகான சபாவில் இன்று முதல்வர் முக.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நடைபயிற்சி ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் முதல்வர் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேரன் குறித்தும் பேசினார்கள். பேரன் இன்பநிதி அண்மையில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றார். அவர் நல்ல முறையில் விளையாட வேண்டும் என பொதுமக்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என பலமுறை தாங்கள் விரும்பியதாகவும் பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே