சென்னையில் அடுத்தடுத்து 6 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி..!!

சென்னையில் 6 இடங்களில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்று முடியாததால் தானாக போலீஸில் கொள்ளையன் சரண்டர் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையின் திருநின்றவூர் பகுதியில் தொடர்ந்து 6 ஏ.டி.எம் மையங்களை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 ஏடிஎம்களிலும் ஒரே ஆள்தான் கொள்ளையடிக்க முயன்றது என போலீஸார் கண்டறிந்து கொள்ளையனை தேடுவதற்குள், கொள்ளையனே சுத்தியலோடு வந்து போலீஸில் சரண்டர் ஆகியுள்ளான்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சேஷாத்ரி என தெரிய வந்துள்ளது. தொழில் நஷ்டத்தால் அவர் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது மனரீதியான பாதிப்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே