கொரோனா தடுப்பு பணியில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

கரோனா தடுப்புப் பணியின்போத உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், சிறுகமணி அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் இங்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.

இங்கு, சிறுகமணி கிழக்குப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் ச.குமார் (46), களப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து, இவரது குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கி எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது, கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே