3வது முறையாக இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!
இன்று (மே 15) மாலை 4 மணிக்கு நிருபர்களை சந்திக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 3ம் கட்ட புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மே 12ம் தேதி, ‘டிவி’ மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, ‘பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்’ என்றார். ‘இந்த அறிவிப்புகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து வரும் நாட்களில் வெளியிடுவார்’ என்றும் கூறினார்.
இதன்படி கடந்த இரு நாட்களாக டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்கட்ட அறிவிப்பில், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.
2ம் கட்ட அறிவிப்பில் ஊரடங்கால் கடுமையாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்கள் அறிவித்தார்.
மேலும், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நிருபர்களை சந்திக்க உள்ள நிர்மலா சீதாராமன், 3ம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.