மே 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது #பொன்மகள்வந்தாள்

கரோனா வைரஸ் பாதிப்பால் சினிமா துறை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள், சினிமா ரிலீஸ் என எதுவே கடந்த 2 மாதங்களாக இல்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை சமாளிக்க படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியிட முடிவு செய்தனர்.

ஆனால் இவர்களின் முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அந்த எதிர்ப்பையும் மீறி தற்போது 7 படங்கள் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1) தமிழ் – ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29 ஆம் தேதி வெளியாக உள்ளது

2) இந்தி – அம்தாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் உருவாகி உள்ள “Gulabo Sitabo” ஜூன் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது

3) தமிழ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள பெண்குயின் திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது

4) கன்னடம் – புனித் ராஜ்குமார் தயாரிப்பில் ராகினி சந்திரன், சிரி பிரஹ்லாத் நடித்துள்ள “LAW” திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது

5) கன்னடம் – பன்னக பரானா இயக்கத்தில் தனிஷ் சைத் நடித்துள்ள “French Biriyani” திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

6) இந்தி – வித்யா பாலன் நடிப்பில் உருவாகி உள்ள “Shakuntala Devi” திரைப்படம் அமேஜானில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

7) மலையாளம் -ஜெயசூர்யா, அதித் ராவ் ஹிதாரி நடிப்பில் உருவாகி உள்ள “Soofiyum Sujathayum” திரைப்படம் அமேசானில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே