இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தலா ரூ.4 லட்சம் நிதி உதவி

தமிழகத்தில் ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் கிராமத்தில் நேற்று இடி தாக்கியதில் உயிரிழந்த சாயதி, விஜயா, கலைச்செல்வி, லட்சுமியம்மாள் ஆகிய 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மின்னல் தாக்கி உயிர் இழந்த, பெரம்பலூர் மாவட்டம் க.எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வேலு, காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையை சேர்ந்த கோபி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே