தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த நாகராஜன், தொழில்முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பது மார்ச் 7-ம் தேதி முதன்முதலில் தெரியவந்தது.

அப்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்தது.

இதையடுத்து மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி மார்ச் 24ம் தேதி துவங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை முதல் ஊரடங்கும், ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை இரண்டாவது ஊரடங்கும், மே 4ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை மூன்றாவது ஊரடங்கும், மே 18ம் தேதி முதல் மே 31 வரைக்கும் நான்காவது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இன்று முதல் கட்டுப்படுத்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அந்தப் பொறுப்பில் இருந்த நாகராஜன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நில சீர்திருத்தத்துறை அதிகாரியாக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே