நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை… (வீடியோ)

நகைச்சுவை நடிகரான குனால் காம்ராவுக்கு இண்டிகோவைத் தொடர்ந்து ஏர் இந்திய விமானமும் பறக்க தடை விதித்துள்ளது.

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, நடுவானில் ‘ரிபப்ளிக் டிவி’ இணை நிறுவனரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியை சந்தித்தது குறித்து ட்விட்டரில் பகிர்ந்த காணொளியும், அதனை ஒட்டி எழுந்துள்ள விவாதங்களும் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளன.

நான் இதை ரோஹித்திற்காக செய்கிறேன் என்று தலைப்பிட்டு அந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.

குணால் கம்ரா வெளியிட்டுள்ள காணொளியில், “Arnab, India wants to know, நீங்கள் கோழையா அல்லது தேசியவாதியா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்.

இணையத்தில் குணால் காம்ரா மும்பையில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமியை கிண்டலடித்த வீடியோ வைரலாக பரவியது.

இதையடுத்து குணால் காம்ரா ஏர் இந்தியா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இண்டிகோ விமான நிறுவனமும் அவருக்கு ஆறு மாதங்களுக்கு தடை விதித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே