“பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது!” – முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!!

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டத்தில் செய்தார்.

மாவட்ட நிர்வாகத்தினருடன் நிறைவுற்ற பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

விழாவிற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் கமல் ஹாசனின் பேச்சைக்கேட்டால், குடும்பம் கெட்டுபோய்விடும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் நாடும் கெடும், வீடும் கெடும். அவர் கூறியெல்லாம் ஒரு கூற்றா?

தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் இருக்கிறது. அதனை பற்றி பேசலாம்.

எம்.ஜி.ஆர் காலங்களில் வெளியான படங்களில் உள்ள பாடல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தனிமனிதனின் முன்னேற்றத்திற்காகவும் இருந்தது. 

இன்று கமலின் படத்தை சென்று பார்த்தல் அந்த குடும்பமே சிதைந்துவிடும். அவரின் பேச்செல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை” என்று அதிரடியாக தாக்கி பேசியுள்ளார் முதல்வர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே