அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உலக தமிழ் சங்கம் சார்பாக சிகாகோவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதைப்பாராட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கு “தங்க தமிழ் மகன்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, சாம்பர்க் நகர மேயர் டாம் டெய்லி, ஓக் புரூக் நகர மேயர் கோபால் ஆல் மலானி மற்றும் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார், தமிழக வீட்டுவசதித்துறை செயலர் கிருஷ்ணன், தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் விஜய் பிரபாகர், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.