பெண்ணை தாக்கிய நடராஜர் கோவில் அர்ச்சகருக்கு 2 மாதம் பூஜை செய்ய தடை, ரூ.5,000 அபராதம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த செவிலியரை தாக்கிய அர்ச்சகருக்கு இரண்டு மாதம் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் லதா கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ச்சகர் தர்ஷனை தேடிவருகின்றனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய அர்ச்சகர் தர்ஷன் திருக்கோவில் பணியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து பொது தீட்சிதர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, அர்ச்சகர் தர்ஷனை கண்டித்து வரும் வியாழனன்று தெற்கு சன்னதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கோரி செவிலியர் சங்கம் சார்பில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டது. விரைவில் அர்ச்சகர் தர்ஷன் கைது செய்யப்படுவார் என சிதம்பரம் டிஎஸ்பி உறுதியளித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே