சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் போலீஸ் விசாரணைக்காக இன்று மீண்டும் ஆஜர்..!!

பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார்.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அதற்கான மனுவை நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்த நிலையில், இது தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.

அதற்காக நேற்று பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இரண்டு பேரையும் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் வீடியோ பதிவு மூலம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை பள்ளி முதல்வரை மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பினார்.

பின்னர், பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரியுமா..? அதேபோல பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ மற்றும் மெசேஜ்களை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருந்தது..?

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மீது முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே