புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 நிவாரணம்..!!

முதல்வரின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 3,000 கொரோனா நிவாரணம் வழங்குவற்கான கோப்புகளை, முதல்வர் என்.ரங்கசாமி அவர்கள், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

முதல்வரின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழகத்திலும், அணைத்து குடும்ப அட்டைதாரரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக, மக்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே