30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்..!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி ஓன்று உள்ளது.

இந்த வங்கியில் இன்று பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி காசாளர் அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போனது.

இதனால், அதிர்ச்சியைடைந்து போன வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்ததில் சிறுவன் ஒருவன் அலேக்காக தூக்கிச்சென்றது தெரியவந்தது.

காசாளர் கவுன்டர் முன்பாக வாடிக்கையாளர்கள் பலரும் வரிசையில் காத்திருந்த நிலையில் , வங்கி காசாளர் தன்னுடைய கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்று விட்டார்.

அந்த நேரம்பார்த்து 10 வயது சிறுவன் ஒருவன் நைசாக கேஷியர் கேபின் அறைக்குள் சென்று, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இரண்டை எடுத்து, தான் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு, மின்னல் வேகத்தில் திடீரென மறைந்தான். 

இவையனைத்தும் வெறும் 30 நொடிகளில் அரங்கேறியுள்ளது.

அந்த சிறுவன் காசாளர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், வரிசையில் நின்ற யாருமே சரியாக கவனிக்கவில்லை.. இந்த சம்பவத்திற்கு முன்னதாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் நுழைந்து ஓரமாக காத்திருந்து , சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளான்.

காசாளர் அறையை விட்டு கிளம்பிய பின் அவன் வெளியே நின்ற அந்த சிறுவனுக்கு சிக்னல் கொடுத்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே