வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக கடந்த ஆறு மாதங்களாக போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தது பாமகவின் இந்த போராட்டம் காரணமாக போராட்டம் காரணமாகவும்; வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணி என்று நிபந்தனை மூலமாகவும் தற்போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் திமுக வன்னியர்களின் வாக்குகளை குறி வைக்கும் நோக்கத்திலும், அதிமுகவுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும்; இந்த வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும், மற்ற சமூக மக்களையும் தூண்டிவிடும் செயலில் இறங்கியது.

திமுகவின் தூண்டுதலின் படி பல்வேறு தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், “போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மனுதாரரின் மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே