சிலிண்டர் விலையை குறைக்க முடியவில்லை எப்படி 6 சிலிண்டர் இலவசம் ?? – டிடிவி தினகரன் தாக்கு..!!

கேஸ் சிலிண்டர் விலையைக்கூட குறைக்க முடியவில்லை, பின்னர் எப்படி ஆண்டு 6 சிலிண்டர் இலவசமாக கொடுக்க முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் பழனிச்சாமி, மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும்; குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுகவின் தேர்தல் பொதுகூட்டம் வரும் மார்ச் 12-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் தேர்தலில் எங்களுடைய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவுள்ளோம். அதனைத் தொடர்ந்து எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்.

இலவச சிலிண்டர் எப்படி கொடுக்க முடியும் எப்படி கொடுப்பார் முதல்வர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்.

கேஸ் விலையை குறைக்க முடியாதபோது, இதனை எப்படி கொடுக்க முடியும். இதெல்லாம் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல், இவர்கள் அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை, எங்களால் முடிந்ததைத்தான் செய்வோம்.

அரசியலில் ஒதுங்கியிருப்போர் குறித்து விமர்சிப்பது சரியானதல்ல, உத்தம வில்லனாக கமல்ஹாசன் செயல்படுகிறார் என விமர்ச்சித்துள்ளார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறேன். ஆர். கே நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற நிரூபர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள்.

ஒவைசி கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது

முதியோர் உதவித்தொகையை ஒழுங்காக கொடுக்க முடியவில்லை, இதில் குடும்ப தலைவிக்கு, ஒருத்தர் ரூ.1000, இன்னொருவர் ரூ.1,500 என வழங்கப்படும் என கூறுவது, மக்களை ஏமாற்றுவதற்காக செய்யக்கூடிய செயல், மக்கள் நிச்சயம் ஏமாறமாட்டார்கள் என கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் நடைபெற்ற திமுக மாநாட்டில், முக ஸ்டாலின், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே