கொரோனாவால் பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுவரை மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து 12 அரசு ஊழியர்கள் பலியாகியுள்ளனர் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போரிட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள் அனைவரின் பணியை மேற்கு வங்க அரசு விருது மற்றும் சான்றிதழ்கள் அளித்து கௌரவிக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே