டிக்டாக் மூலம் பிரபலமான பெண்ணுக்கு பாஜக சார்பில் தேர்தலில் சீட்

ஹரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவருக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத். டிக் டாக் செயலியின் மூலம் ஆடிப் பாடி பிரபலமடைந்த இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

ஹரியானா மாநில பாஜக சார்பில் ஆதம்பூர் தொகுதியில் இவர் எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

இதுகுறித்து கூறிய சோனாலி போகத், தொகுதி மக்களைக் கவர டிக் டாக் செயலியின் மூலமாகவும் பிரச்சாரத்தை செய்வேன் என்று கூறினார்.

குறிப்பாக தேசபக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிடப்போவதாகவும், சமூக நலன்களைக் குறித்த கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க போவதாகவும் சோனாலி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே