EIA 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு அடுத்தபடியாக மக்களிடையே அதிகம் பரபரப்பாக பேசப்பட்டு வருவது EIA 2020 என்னும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைதான்.

1986ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த சுற்றுச்சூழல் சட்டத்தில் இதுவரையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சாரம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் , மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையில், தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் முன் அனுமதி பெறத் தேவையில்லை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் வெறும் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும், தொழில் தொடங்கவிருக்கும் நிறுவனம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் புறக்கணிப்பு என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் ; இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு சமம் என்ற ஹேஸ்டேக்கையும் போட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே