இடஒதுக்கீடு : சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன் – முதல்வர் பழனிசாமி

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் இடஒதுக்கீடு சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும்.

இதற்கு சட்ட ரீதியாக எந்த விதமான தடையும் இல்லை என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை தமிழக கட்சிகள் வரிசையாக பாராட்டி வருகிறது. திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டி வருகிறது.

தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி இந்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார்.

அவர் தனது டிவிட்டில், சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் பல்வேறு தரப்பு மூலம் போடப்பட்ட வழக்கு ஆகும்.

அதிமுக, திமுக, தமிழக அரசு, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திக பாமக, திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே