மத்திய அரசு தளர்வுகளுடன் அறிவித்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது அன்லாக் 4.0 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  • செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை
  • வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு விதிக்கலாம் என கூறியுள்ளது.
  • உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் தனியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது.
  • மேலும், மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது, திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும், வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே