டெல்லி வன்முறையில் கருகிய கால் தந்தையுடையதா? – பரிதவிக்கும் மகள்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வசித்து வருபவர் முகமது நஸ்ருதீன் – குல்ஷன் தம்பதியினர். இதில் முகமது கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்நிலையில் வீட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குல்ஷனின் 61 வயதான தந்தை தான் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற டெல்லி கலவரத்தின் போது ஆடு விற்பனைக்கு சென்ற குல்ஷனின் தந்தை வீடு திரும்பாததால் அதிர்ச்சியான குல்ஷன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர்கள் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு கூறியுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு சென்ற பார்த்துள்ளார் குல்ஷன். அங்கு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.

அந்த உடலின் கால் பாகம் மட்டும் எரியாமல் இருந்துள்ளது. அதனை வைத்து தந்தை அடையாளம் காணமுடியவில்லை.

எனவே டிஎன்ஏ டெஸ்ட் மூலம் கண்டுப்பிடிக்கலாம் என நினைத்து மருத்துவமனையில் டெஸ்ட் கொடுத்துள்ளார்.

தற்போது தனது மாற்றுத்திறனாளி கணவருடன் டெஸ்ட் ரிப்போட்டின் பதிலுக்காக மருத்துவமனையில் காத்து வருகிறார் குல்ஷன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே