சிமெண்ட் விலை உயர வாய்ப்பு – சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம்

சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக, தென்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் சிமெண்ட் விலை ஒரு மூட்டை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்தது. இதனால், கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்.

ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்களில் சிமெண்ட் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக, உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்து இருப்பது, மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களில் சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து உள்ள காரணத்தினால், சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு குறைந்தபட்சம் அறுபது ரூபாய் வரை உயரக்கூடும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே