தன்னார்வ குழுவோடு இணைந்து கழிவறையை சுத்தம் செய்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இன்று காலை ‘நம்ம பீச், நம்ம சென்னை’ என்ற சென்னையை சேர்ந்த கடற்கரையையும் பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைக்க உதவும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து அவர்களின் முன்னெடுப்பில் பங்கெடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோலிங்கநல்லூர் பகுதியில் 199 வது வார்டில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு தங்கள் பணியையாற்றியுள்ளனர்.