ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்கள் பணியிடமாற்றம்

ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் 4 காவலர்கள் இடமாற்றம்.

அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர்.

அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்.

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன.

ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இதையடுத்து, ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ரவுடி வெட்டியதாக கூறப்படும் காவலர் முபாரக் உட்பட ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் 4 காவலர்களை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, டி.பி.சத்திரத்துக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே