திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து 63 79 90 48 48 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், புகார் அளிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே