குஜராத் மாநிலத்தில் ஆறு நகரங்களில் இன்று நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத், பாவ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட ஆறு நகராட்சி பகுதிகளில் இன்று உள்ளாட்சிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

144 வார்டுகளில் உள்ள 575 இடங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. 1.14 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பாஜக, காங்கிரஸ் உள்பட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

144 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 469 வேட்பாளர்கள், ஏஐஎம்ஐஎம் 21 வேட்பாளர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வரும் செவ்வாய்க்கிழமையன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவர் ராஜ்கோட் பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே