அவினாசியில் இளம்பெண் மீது கார் மோதி விபத்து

திருப்பூர் அருகே சாலையோரம் நடந்துசென்ற பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசியை அடுத்த முத்தம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். வீட்டுக்கு அருகில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி நந்தினி தனது மகள் கோதையை தூக்கிகொண்டு அரிசிக்கடையில் இருந்து வீட்டிற்கு சாலையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவிநாசியில் இருந்து கோவிந்தசாமி என்பவர் வந்த கார், நந்தினி மீது மோதியுள்ளது.

இதில் நந்தினி சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

இறந்த நந்தினியின் உடல் உறுப்பினை அவரது உறவினர்கள் தானமாக கோவை அரசு மருந்துவமனைக்கு கொடுத்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைதான நிலையில் நந்தினி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்பொது வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே