பயிர் கழிவு எரிப்பு: உ.பி.,யில் முதல் முறையாக 29 விவசாயிகள் கைது.

டில்லி, உ.பி., பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டில்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அறிவுறுத்தலின் பேரில் பயிர் கழிவுகளை எரிப்பதை விவசாயிகள் நிறுத்தியதால், 2 நாட்களுக்கு முன் டில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று மீண்டும், மோசமான நிலைக்கு காற்றின் தரம் தள்ளப்பட்டுள்ளது.

காற்று மாசு தொடர்பான வழக்கை ஏற்கனவே தான் முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், காற்று மாசை அதிகரிக்க செய்யும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் உ.பி.,யில் 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.13.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொர்பாக இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காற்று மாசு தொடர்பாக விவசாயிகள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே