இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. கான்பராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி சிட்னியில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மணிஷ் பாண்டே, ஜடேஜா, முகமது ஷமிக்குப் பதில் ஸ்ரேயாஸ் ஐயர், சகால், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக பின்ச் இடம் பெறவில்லை. மாத்யூ வேட் கேப்டன் பொறுப்பேற்றார். ஸ்டாய்னிஸ் அணிக்கு திரும்பினார்.

மாத்யூ வேட் அரைசதம் ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ வேட், ஷார்ட் (9) ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகமாக ரன்கள் சேர்த்த வேட், 25 பந்தில் அரைசதம் அடித்தார்.

இவர் 32 பந்தில் 58 ரன்கள் விளாசினார்.

மேக்ஸ்வெல் 22 ரன் எடுத்தார். ஸ்மித் 46, ஹென்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் நடராஜன் 2, சகால் 1, ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே