2020-21-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்.
சுமார் 3 மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே பட்ஜெட் உரை முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய அவர், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும்; இது சாமானியர்களுக்கான பட்ஜெட் எனவும்; நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்
மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோருக்கு உதவும் எனவும், நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சுமை பெரிதும் குறையும் எனவும், வரி குறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், அனைத்து துறைகளுக்கும் சலுகைகளை அளிக்கும் பட்ஜெட் எனவும் கூறினார்.