சுத்தமான காற்று திட்டத்துக்கு 44,000 கோடி ரூபாய், ஊட்டச்சத்து திட்டத்துக்கு 35,000 கோடி ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 2020-2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில்,

  • நாடுமுழுவதும் உடான்(UDAN) திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும். 
  • சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கை. 
  • ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 
  • சுத்தமான காற்று திட்டத்திற்கு 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம்.

செல்பேசிகள், மின்னணு கருவிகள், மின் கடத்தி ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம். மாநிலங்களுடன் இணைந்து ஐந்து புதிய “பொலிவுறு நகரங்கள்”, அரசு – தனியார் துறை பங்கேற்புடன் உருவாக்கப்படும். 

ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை 2022 ஆம் ஆண்டு நடத்த திட்டம். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 

வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள். முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே