#Budget2020 : தனிநபருக்கான வருமான வரி குறைப்பு அறிவிப்புகள்

2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் வருமான வரி சதவீதத்தைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தனிநபர் வருமான வரி விதிப்பு முறை முற்றாக மாற்றியமைக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி, வருமான வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கபட்டுள்ளன.

  • 5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை.
  • 5 லட்ச ரூபாய் முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஏழரை லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 10 லட்சத்தில் இருந்து 12.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 12.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி 30 சதவீதமாக நீடிக்கும்.

தனிநபர் வருமான வரி முறையை எளிதாக்கும் வகையில், 70 வகையான வருமான வரி கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே 100 வகையான கழிவுகள் இருந்த நிலையில், அதில் 70 வகையான கழிவுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே