பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு..!!

பங்குச்சந்தை வணிகம் இன்று 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிந்து 50,420 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 14,964 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 

மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டன. மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகமட்சமாக இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ. ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.

ஓ.என்.ஜி.சி. 3.28 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.19 சதவிகிதமும், எம்&எம் நிறுவனம் 1.55 சதவிகிதமும் உயர்ந்து காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே