தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,520 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,690 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனையானது.

முகூர்த்தங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிய நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தங்கம் விலை 1,464 வரை சரிவை சந்தித்தது நகை வாங்குவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லாமல் ரூ. 65,400 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே