ஜூன் 30-ம் தேதி வரையிலான ரயில் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள குறிப்பில், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வரும் ரயில் மற்றும் சிறப்பு ரயில்களே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு மே 17-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் தெரிவித்திருந்தார்.
ஆனால் 4வது ஊரடங்கு வேறுமாதிரி இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் ரயில் முன்பதிவு டிக்கெட் ஜூன் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.