#BREAKING : நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து – முதல்வர் பழனிசாமி

கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;

* கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்.

* கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* 6 அமைச்சர்கள் சென்னையில் 15 மண்டலங்களில் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

*  சென்னையில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

* தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதாவது நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

* அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

* ஒரு மணடலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம்.

* கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும் அரசின் சார்பில் நன்றி.

* மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* தமிழகத்தில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* மதுரையில் பொதுமுடக்கப் பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே