சென்னை பூந்தமல்லி இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது.
இன்று இந்தியன் 2 படத்திற்கான செட் வேலையில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
10 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.