மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
2003ம் ஆண்டு மின்சார திருத்த சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்திருத்தம் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதோடு, மாநில அரசின் நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால் இந்த சட்டத்திருத்த முன்வடிவினை திரும்ப பெறுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசை பொறுத்தவரை சட்ட முன்வடிவை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், பல்வேறு நபரிடம் இருந்து மின்சாரம் தனியாருக்கு சென்றுவிடக்கூடியதாக மாறிவிடும். மேலும் மாநில அரசின் நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக சட்டத்திருத்த முன்வடிவு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.