#BREAKING : இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து : 3 பேர் உயிரிழப்பு; இயக்குநர் ஷங்கர் படுகாயம்..!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இன்று இரவு சண்டை காட்சி ஒன்றை படமாக்குவதற்கான பணிகள் நடைபெற்றன.

அதற்காக படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. யாரும் எதிர்பாராத வகையில் கிரேன் அறுந்து விழுந்தது.

அப்போது பணியில் இருந்து கீழே விழுந்த சண்டை கலைஞர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இயக்குநர் ஷங்கரின் காலில் முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே