சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை விஜயலட்சுமி..

சீமான் அவரது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவரது ரகசியங்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும் என்றும் நடிகை விஜயலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் சீமானுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை விஜயலெட்சுமி.

கடந்த சில தினங்களாக திடீரென சீமானுக்கு எதிராக பொங்கி வரும் விஜயலெட்சுமி அவருக்கும் தனக்கும் உள்ள பழக்கத்திற்கு சாட்சியாக சில வீடியோக்களை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக தனக்கு எதிராக பேசும் தம்பிகளை சீமானின் மவுத் பீஸ் என்று வருத்தெடுத்தார் விஜயலெட்சுமி.

இந்த நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் என்பவர் விஜயலெட்சுமியை கடுமையாக விமர்சித்ததோடு, உனக்கு ஒரு நாள் இருக்கு என்ரும் எச்சரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி வீரலெட்சுமியாக மாறி சீமானுக்கு எதிரான ஆடியோ ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாக அறிவித்தார்.

மேலும் தன்னை மேடையில் மிரட்டிய நாம் தமிழர் காளியம்மாளுக்கே தான் ஆத்தா என்றும் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

ஆதரவாளர்களை விட்டு விமர்சிப்பதை சீமான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அனைத்தையும் வெளியிட்டு விட்டு சாவுக்கு காரணம் சீமான் தான் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று விஜயலெட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் உரக்க குரல் கொடுக்கும் சீமான், சொந்த பிரச்சனையில் விஜயலெட்சுமி யின் குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது வரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே