“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..!!

நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது.

இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவனுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் பாஜகவை சேர்ந்த நடிகைகள் கவுதமி, காய்த்ரி ரகுராம் மற்றும் ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

போராட்டத்தின்போது பேசிய காயத்ரி ரகுராம், “இந்துவாக இருந்து கொண்டு திருமாவளவன் செய்யும் துரோகத்தை மன்னிக்க மாட்டோம். இன்றிலிருந்து உங்கள் கெட்டநேரம் தொடங்கிவிட்டது.

பெண்களின் உணர்வை கொச்சை படுத்தியதற்காக நாங்கள் உங்களை சும்மா விட மாட்டோம். கடந்த ஆண்டே நேருக்கு நேர் விவாதம் செய்ய உங்களை அழைத்தேன்.

ஆனால் நீங்கள்தான் அமெரிக்காவிற்கு ஓடி ஒளிந்துவிட்டீர்கள். நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என திருமாவளவன் கூறுகிறார்.

ஆனால் நங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழட்டுபவர்கள்” என ஆவேசமாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே