2019-20ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

2019 – 20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில் மட்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2019-20 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீடுகள் / கொடுப்பனவுகளுக்கான காலக்கெடுவை ஐடி துறை ஜூலை 31 வரை நீட்டித்த சில நாட்களுக்கு பின்னர் வருமான வரித் துறையின் அறிவிப்பு வந்துள்ளது.

முன்னதாக பயோமெட்ரிக் ஆதாரை பான் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, 2019-20 நிதியாண்டிற்கான டி.டி.எஸ் / டி.சி.எஸ் அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடுவையும் 2020 ஜூலை 31 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

அதே போல் நிதியாண்டு 19-20க்கான டி.டி.எஸ் / டி.சி.எஸ் சான்றிதழ்களை வழங்குவது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே