பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.

இதனால், ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றக்காவலில் வைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே